'13 ஆண்டுகளுக்கு முன் தனுஷ் சார் கூட பார்வையாளராக வந்தேன்'…! - ஃபிலிம்ஃபேர் மேடையில் சிவகார்த்திகேயன் - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் நேற்று (பிப்.21) 70வது Filmfare Awards South விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டில் ‘அமரன்’ திரைப்படத்தில் தனது வலுவான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், முதன்மை கதாபாத்திரத்திற்கான சிறந்த நடிகர் விருதை வென்று கவனம் பெற்றார்.

மேலும், விருது பெற்ற பின் உணர்ச்சியுடன் பேசிய அவர், “13 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் சாருடன் இந்த விழாவுக்கு சாதாரணமாக வந்தேன். அப்போது இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தேன்.

இன்று அதே மேடையில் முதல் வரிசையில் நின்று விருது பெறுவதற்கு 13 ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது” என நினைவுகளை பகிர்ந்தார்.

மேலும், பட ஒப்பந்தத்தின் போது கமல் ஹாசன் அலுவலகத்தில் குவிந்திருந்த விருதுகளை பார்த்த அனுபவத்தையும் குறிப்பிட்டு, “இனி இளம் திறமையாளர்கள் வெல்ல வேண்டும்” என்ற அவரது வார்த்தைகள் தான் எனக்கு ஊக்கமாக இருந்தது என்றார்.

‘அமரன்’ படத்தின் வெற்றிக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதிய கதை முக்கிய காரணம் என்றும், “என்னை எத்தனை முறை தள்ளினாலும் மீண்டும் எழுப்புவது என் ரசிகர்கள்தான்; அவர்களால்தான் இன்று இந்த மேடையில் விருதுடன் நிற்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 years ago Dhanush sir came spectator Sivakarthikeyan Filmfare stage


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->