“பெண்கள் சக்தியின் சின்னம், மக்கள் மனதில் நிலைத்த தலைவர்” - நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ மேடையில் ஜெயலலிதாக்கு புகழ்மாலை...!
symbol women power leader who remains hearts people Narendra Modi pays tribute Jayalalithaa Mann Ki Baat stage
நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தனது வானொலி உரை நிகழ்ச்சி மன் கி பாத் மூலம் நாட்டுமக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறார்.
அந்த நிகழ்ச்சியின் சமீபத்திய உரையில், மக்கள் மனதில் என்றும் வாழும் மகத்தான தலைவராக ஜெயலலிதா அவர்களை பிரதமர் பாராட்டிப் பேசினார்.பெண்களின் வலிமை மற்றும் துணிச்சலின் உருவகமாக ஜெயலலிதா விளங்கினார் என்றும், நாட்டின் மீது கொண்டிருந்த அவரின் தேசப்பற்று அபாரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதியாக நிலைநிறுத்த பல திடமான முடிவுகளை எடுத்த தலைவராகவும் அவர் நினைவு கூறப்பட்டார்.மேலும், ஜெயலலிதா செய்த பொதுச்சேவை மற்றும் மக்கள் நலப் பணிகள் என்றும் தனது நினைவில் நிலைத்து நிற்கும் என பிரதமர் தெரிவித்தார்.
தாம் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் கூட ஜெயலலிதா கலந்து கொண்டதை நினைவுபடுத்திய அவர், தமிழக மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் அன்பும் மரியாதையும் நேரில் கண்டதாக தெரிவித்தார்.
ஜெயலலிதா பெயர் சொல்லப்படும் ஒவ்வொரு தருணத்திலும் தமிழக மக்களின் முகங்களில் பெருமையும் ஒளியும் தெரிகிறது என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்தார்.
English Summary
symbol women power leader who remains hearts people Narendra Modi pays tribute Jayalalithaa Mann Ki Baat stage