தூங்கி எழுந்தவுடன் கடிகாரத்தை பார்ப்பவர்களா நீங்கள்..? உடைந்த கடிகாரத்தை உடனே தூக்கி வீசுங்க.. இல்லனா...? - Seithipunal
Seithipunal


நம்மில் பலர் இரவு தூங்கி எழுந்தவுடன் முதலில் நேரத்தை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். ஒரு சிலர் மொபைல் போனில் நேரம்  பார்ப்பது,  அல்லது அலாரம் செட் செய்து அதனை கொண்டு நேரத்தை கணிப்பது.

பெருபாலானோர் வீட்டில் இருக்கும் சுவர் கடிகாரத்தில் நேரத்தை பார்க்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றார்கள். தற்போதை காலத்தில் நாம் பல பழக்க வழக்கங்களை கைவிட்டு இருந்தாலும், ஒரு சிலருக்கு இந்த வழக்கங்கள் தன்னம்பிக்கை அளிக்கும் விஷயமாகவும்,  உற்சாகத்தை ஏற்படுத்த கூடிய விஷயமாகவும் அமையும். 

பொதுவாக, வேத ஜோதிட நிபுணர்கள் கூற்றுப்படி, நாம் பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் நமக்கு நற்பலன்களை அளிப்பது இல்லை; ஒரு சில விஷயங்கள் எதிர்மறை பலன்களையும் கொண்டு வரலாம்.

வேத ஜோதிட கணிப்புகளில் படியும், வாஸ்து சாஸ்திரத்தின் படியும், காலை எழுந்தவுடன் நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்கள், நம் வாழ்க்கையில் எதிர்மறையான பலன்களை கொண்டு வருகிறது. ஜோதிட நிபுணர்கள் கூற்றுப்படி, குறிப்பிட்ட அந்த சில பொருட்களை நாம் தூங்கி எழுந்தவுடன் பார்ப்பது கூடாது. தவிர்க்க முடியாத நிலையில் பார்க்க நேர்ந்தால், ஒரு சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் எதிர்வரும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை சமாளிக்க முடியும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, நிபுணர்கள் கூற்றுப்படி தூங்கி எழுந்தபின் கடிகாரம் (சுவர் கடிகாரத்தில் நேரம்) பார்ப்பது தவறு இல்லை; ஆனால் அந்த கடிகாரம் இயக்க நிலையில் இருப்பது அவசியம் என்று கூறுகிறது. அதாவது, ஓடாத கடிகாரத்தை பார்ப்பது கூடாது அல்லது உடைந்த கடிகாரத்தை பார்ப்பது கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது, இயக்கத்தில் இல்லாத கடிகாரத்தை பார்ப்பது உங்கள் வேகத்தை தடுக்கும் மற்றும் பணிகளில் தாமதத்தை உண்டாக்கும். மேலும், பணியிடத்தில் பிரச்சனைகள் அதிகரிக்க செய்யும். நிதி சார்ந்த விஷயங்களில் எதிர்மறை விளைவுகள் உண்டாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேப்போன்று, வழக்கமாக செய்து வரும் பணிகளில் தாமதம் காணப்படும், பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள், வழக்குகள் உண்டாக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாட்களாக முயற்சித்து வந்த விஷயங்களை முடிக்க முடியாத ஒரு நிலை உண்டாகலாம். அதாவது, ஓடாத கடிகாரத்தை காண்பதால் வரும் பிரச்சனைகள் மற்றும் சவால்களை சமாளிக்க, கடிகாரத்தை உடனடியாக சரி செய்வதோடு, சூரிய நமஷ்காரத்தை முறையாக செய்வது நல்லது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you the type of person who looks at the clock when you wake up


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->