''இ20 பெட்ரோல் பயன்பாடினால் வாகன இன்ஜின் பாதிப்பு, மைலேஜ் குறையும் என்பதற்கு ஆதாரம் இல்லை'': மத்திய அரசு விளக்கம்..! - Seithipunal
Seithipunal


இ20 பெட்ரோல் பயன்பாடு காரணமாக வாகன இன்ஜினை பாதிக்கும் அல்லது மைலேஜ் குறையும் என்பதற்கு எந்தவொரு ஆய்விலும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக புதன்கிழமை அன்று மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதாவது, எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை துறை சார்ந்த வல்லுநர்களின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும், நீண்ட கள ஆய்வு, ஆய்வுகூட முடிவுகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் பேசிய பிறகே தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது வாகன இன்ஜினை பாதிக்கும் அல்லது மைலேஜ் குறையும் என்பது எந்தவொரு ஆய்விலும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ஐஐபி, எஸ்ஐஏஎம், மற்றும் ஏஆர்ஏஐ உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கம் குறித்து பல ஆண்டுகள் ஆய்வு செய்தன என்றும் அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20 பெட்ரோல்) விற்பனையை எதிர்த்து வரும் ஆகஸ்ட் 04-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல போக்குவரத்து சங்கங்கள் திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய அரசு இதனை குறிப்பிட்டுள்ளது.
.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central government says there is no evidence that using E20 petrol harms vehicle engines


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->