பழங்காலப் பாணியில் இசையமைக்க 200 இசையமைப்பாளர்கள்; 14 மணி நேரத்தில் உருவான பாடலுக்கு பின் மனக்கசப்பு; மன்னிப்புக்கேட்ட ஷாருக்கான்..!
Shah Rukh Khan apologizes for the resentment after the song was composed in 14 hours with 200 composers
கடந்த 2007-ஆம் ஆண்டு ஃபராகான் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம் 'ஓம் சாந்தி ஓம்'. இந்தப் படத்தின் மூலமாகதான் தீபிகா படுகோன் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு 200 இசைக்கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர். அந்த ஆடல் குறித்து விவரங்களை இங்கு பார்க்கலாம்.
'ஓம் சாந்தி ஓம்' படத்தில் 'தூம் தானா..' என்ற பாடலுக்கு தீபிகா படுகோன் நடனமாடுவார். இந்தப் பாடலை பழங்கால முறைப்படி உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். அதற்காக பழம்பெறும் நடிகர்களான சுனில் தத் மற்றும் ராஜேஷ் கன்னாவுடன் தீபிகா படுகோனை சேர்த்து காட்ட விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தை படக்குழுவினர் பயன்படுத்தினர்.
இதனால், அந்தப் பாடலை ஒரு பழங்காலப் பாணியில் இசை உருவாக்கும் பொறுப்பை விஷால் சந்திரசேகர் ஏற்றார். அதற்காக 200 இசைக்கலைஞர்களைப் அந்த பாடலில் பயன்படுத்த முடிவு செய்தனர்.

அந்தப் பாடலுக்கு ஒரு பழம்பெரும் உணர்வைக் கொடுக்க, அனுபவமிக்க ஒரு பக்கவாத்தியக் கலைஞர் தேவைப்பட்டார் என்பது அப்போது அவர்களுக்கு சிக்கலாக இருந்தது. ஆகையால், அவர் பழம்பெரும் இசையமைப்பாளரான பியாரேலாலின் உதவியை நாடியுள்ளார். பின்னர் முழு கதையையும் கேட்ட பியாரேலால், அவர்களுக்கு உதவ ஒப்புக்கொண்டார்.
அந்தப் பாடலுக்கு 200 இசைக்கலைஞர்கள், மூன்று முதல் நான்கு ஒத்திகைகள், மற்றும் மூன்று முதல் நான்கு நாட்கள் ஒலிப்பதிவு தேவைப்படும் என்று அவர் விளக்கினார். பியாரேலால் வகுத்திருந்த விதிகளை அனைவரும் பின்பற்றினர். அதன்படி, டோல், தபலா, சிதார், கிட்டார் போன்ற பல்வேறு இசைக்கருவிகளின் துணையுடன், படப்பிடிப்பு 14 மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்தது. யாரும் ஒரு இடைவேளை கூட எடுக்கவில்லை.

ஆனால், அந்த பாடலை மிக்ஸ் செய்ய தன்னை அழைக்காததால் பியாரேலால் வருத்தமடைந்தார். இசை சிடிக்கள் மற்றும் கேசட்டுகளில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படாமால் விட்டது அவரை மிகவும் கோபப்படுத்தியது. இந்தச் சம்பவத்தை, அப்படத்தின் எழுத்தாளரான முஷ்டாக் ஷேக், தனது 'தி மேக்கிங் ஆஃப் ஓம் சாந்தி ஓம்' என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.
மிக்ஸிங் அமர்வின் போது தனக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை அல்லது அழைக்கப்படவில்லை என்பதால் பியாரேலால் வருத்தமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், "மக்கள் இந்தப் பாடலைக் கேட்கும்போது, இதில் லக்ஷ்மிகாந்த்-பியாரேலாலுக்குப் பங்கு உண்டு என்பதைப் புரிந்துகொள்வார்கள் வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பின்னர் இது குறித்து ஷாருக் கான் அறிந்ததும், அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். விஷால்-சேகரும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காததற்காக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
English Summary
Shah Rukh Khan apologizes for the resentment after the song was composed in 14 hours with 200 composers