தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026; 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 03 ஆண்டு சிறை மற்றும் அபராதம்; மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்..! - Seithipunal
Seithipunal


'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கும் வகையில் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971'-ஐ, திருத்துவதற்கான இந்த மசோதாவை, உள்துறை இணை-அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார்.

அட்டஹன்படி, 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026'-ன் படி, தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடும் கூட்டத்தை வேண்டுமென்றே தடுப்பதாகவோ அல்லது இடையூறு விளைவிப்பதாகவோ கண்டறியப்படும் எவருக்கும் மூன்றாண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட உள்ளது.

1971-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின்படி, தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலை பாடுவதை தடுப்பதற்கோ அல்லது அதைப் பாடும் கூட்டத்துக்கு இடையூறு விளைவிப்பதற்கோ தண்டனை வழங்க வழி வகுக்கப்பட்டுள்ளது.

அப்போது, தேசியப் பாடலான வந்தே மாதரத்திற்கு அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், தேசிய பாடலுக்கும் அதேபோன்ற பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன், தற்போது தேசியப் பாடலாகக் கௌரவிக்கப்படும் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவதை அவமதிப்பதைத் தடுக்க சட்டப்பூர்வ ஏற்பாடு எதுவும் இல்லாமல் இருந்தது. எனவே, தேசியப் பாடலை பாடுவதை வேண்டுமென்றே தடுப்பதையோ அல்லது அத்தகைய பாடலைப் பாடும் கூட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதையோ தடை செய்யவும், அத்தகைய செயல்களைத் தண்டனைக்குரியதாக மாற்றவும், சம்பந்தப்பட்ட சட்டத்தின் பிரிவு 03-இல் தேசியப் பாடலையும் அதன் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் இந்த திருத்தம் செய்ய முன்மொழிப்பட்டுள்ளதக என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்காற்றிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய 'வந்தே மாதரம்' பாடல், தேசிய கீதமான ஜன கண மன-க்கு இணையான கௌரவத்தையும் அந்தஸ்தையும் பெற வேண்டும் என்று 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற்ற அரசியலமைப்புச் சபையின் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறி இருந்ததையும் இம்மசோதா சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஜனவரி 28-ஆம் தேதி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவதற்கான முதல் கட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, 'குடியரசுத் தலைவர் வருகை, தேசியக் கொடி ஏற்றம் மற்றும் ஆளுநர்களின் உரை போன்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் 03 நிமிடங்கள் 10 வினாடிகள் கால அளவு கொண்ட 'வந்தே மாதரம்' பாடலின் ஆறு சரணங்களும் பாடப்பட வேண்டும்.

அத்துடன், தேசியப் பாடலும், தேசிய கீதமும் பாடப்படும்போதோ அல்லது இசைக்கப்படும்போதோ முதலில் தேசியப் பாடலே பாடப்படவோ அல்லது இசைக்கப்படவோ வேண்டும். தேசியப் பாடல் பாடப்படும்போது அனைவரும் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொண்ட அந்த உத்தரவில், அனைத்துப் பள்ளிகளிலும் அன்றையப் பணிகளைத் தேசிய பாடலை அனைவரும் இணைந்து பாடுவதன் மூலமே தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 years imprisonment and fine for insulting the song Vande Mataram Bill passed in Rajya Sabha


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->