மதுரைக்குப் போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்... பாட்டு போட்டு கண்டித்த வானதி சீனிவாசன்!
BJP Vanathi Srinivasan Condemn to tvk govt cm vijay
பாஜக வானதி சீனிவாசன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "கும்பாபிஷேகம் கண்ட மாமதுரையின் சமீபத்திய நிலை.. கடந்த வாரம் ஒரே நாளில் 3 கொலைகள்..
இந்த வாரம் முதல் நாளே அலங்காநல்லூரில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு செய்தியுடன் ஆரம்பித்திருக்கிறது..
முதல்வர் விஜய் நடித்த பட பாடலை கொஞ்சம் மாற்றி
மதுரைக்குப் போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும் என்று தான் பாடத் தோன்றுகிறது மதுரையின் சமீபத்திய நிலை...
மதுரை மட்டுமல்ல ஒட்டு மொத்த மாநிலத்திலும் குற்றச் சம்பவங்கள் குறைந்து அமைதி எப்போது திரும்பும் முதல்வர் விஜய் அவர்களே? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சென்னையில் தலைமை காவலர் ஒருவர் தனது வளர்ப்பு மகளையே மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. தந்தை-மகள் உறவு முறையின் உன்னதத்தையே கெடுத்த காவலரின் இழிவான இந்த செயல் வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
தவெக ஆட்சி அமைத்த நாள் முதல் தொடர்ந்து பெண்கள் கண்ணீர் சிந்துவது தொடர்கதையாகி வரும் வேளையில் அவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய காவல் துறையைச் சேர்ந்தவரே வீட்டிலேயே தனது வக்கிர புத்தியை அரங்கேற்றியிருப்பது வெட்கக்கேடு.
தொடர்ந்து பெண்களுக்கு இதுபோன்று கொடுமைகள் நிகழ்ந்து வரும் வேளையில் சிங்கப்பெண் படையோ 100 நாட்கள் சாதனை என வழக்கமாக பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, சாதனை என்று கூறுவது எப்படி தகும்? அப்போது பெண்கள் பாதுகாப்பிற்கென இயங்கும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் பணிகள்தான் என்ன? தினமும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை அறியும் போது தவெக ஆட்சியும் பெண்களின் பாதுகாப்பில் நிர்வாகத் திறமையை இழந்து விட்டது என்பது தான் உண்மை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Vanathi Srinivasan Condemn to tvk govt cm vijay