நியூசிலாந்து வானில் வர்ணஜாலம்; பிரம்மாண்ட விண்கற்கள் வலம்; அதிவேக ஒலியுடன் கடந்த அதிசய நிகழ்வு..! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தில் இரவு வானில் அடுத்தடுத்து இரண்டு ராட்சத விண்கற்கள் கண்கவர் ஒளியுடன் வலம் வந்துள்ளதோடு ,அப்போது ஏற்பட்ட அதிர்வலைகள் அத்தனை பார்த்த மக்களை மிரளச் செய்துள்ளது.

நியூசிலாந்தின் தெற்கு தீவுப் பகுதிக்கு மேல் பெரிய விண்கல் ஒன்று சென்றதைத் தொடர்ந்து, வடக்கு தீவுப் பகுதிக்கு மேலே இரண்டாவது ஒளிரும் விண்கல் ஒன்றும் வானைக் கிழித்துச் சென்றுள்ளது. இந்த நிகழ்வின்போது கார்களின் கேமராக்களில் வானம் வெள்ளை, ஆரஞ்சு மற்றும் ஊதா நிறப் பிரகாசத்தால் ஜொலித்தது பதிவாகியுள்ளது.

அத்துடன், கிழக்கிலிருந்து மேற்காகச் சென்று விண்கல் இரவு வானை வெளிச்சமாக்கியதுடன், கடந்து சென்ற பின்பும் அதன் தடயம் ஒரு நிமிடத்திற்கும் மேலாக வானில் தெரிந்ததாக கூப்படுகிறது. இந்த விண்கல் ஆரஞ்சு நிறப் பந்து போல் எரிந்து கொண்டிருந்தது என்றும் அதிலிருந்து கரும்புகை வெளியேறுவதையும் தங்களால் பார்க்க முடிந்தது எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

கண்கொள்ளா காட்சியாக  இருந்தது மட்டுமல்லாமல், வளிமண்டலத்தில் சக்திவாய்ந்த ஒலி அலைகளை உருவாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகளும் வனவிலங்குகளும் அச்சமடைந்துள்ளன. 

விண்கற்கள் அதிவேகத்தில் வினாடிக்கு பல 10 கி.மீ. வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, அவற்றுக்கு முன்பாக உள்ள காற்று கடுமையாக அழுத்தப்படுகிறது. இந்த விரைவான அழுத்தம் காரணமாக சுற்றியுள்ள காற்று அதிவேகமாக சூடாகி, கண்கவர் ஒளியையும் தரையில் உணரப்பட்ட அதிர்வலைகளையும் ஏற்படுத்துகிறது என்று வானியலாளர்கள் விளக்குகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Giant meteors circle the sky in New Zealand


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->