மத்திய அரசு கொடுத்த பணத்திற்கு கணக்கு காட்டதா தமிழக அரசு - பாஜக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி!
BJP MLA Vanathi Srinivasan condiment to DMK Govt MK Stalin
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழக கல்வித்துறை குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதில், "தமிழகத்தில் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி வருகிறார். ஆனால் உண்மையில் மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு கோடிக்கணக்கான நிதியை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிப்பதும், கழிப்பறை வசதி குறைவதும், ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பாமல் இருப்பதும் தமிழகத்தின் நிலை. இவை அனைத்திற்கும் பொறுப்பு மாநில அரசுக்கே உள்ளது.
தேர்தலின் போது ஆசிரியர்களுக்கு திமுக பல வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் 4.5 ஆண்டுகள் கடந்தும் அவை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழும்போதெல்லாம், மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற ஒரே காரணத்தைத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.
மத்திய அரசு வழங்கிய நிதியை எவ்வாறு செலவழித்தார்கள் என்பதற்கான ரசீதுகளை தமிழக அரசு தரவில்லை. அவை அளிக்கப்படும்போதுதான் அடுத்த கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இருப்பினும், மாநில அரசு உண்மையை மறைத்து, மத்திய அரசு வஞ்சிக்கிறது எனக் கூறி வருகிறது.
மேலும், ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கை, உரிய சட்ட ஆலோசகர்களை நியமித்து நீதிமன்றத்தில் திறம்பட நடத்துவது மாநில அரசின் கடமை. ஆனால் அதை புறக்கணித்து, தொடர்ந்து நீதிமன்றத்தை காரணமாகக் கூறி நேரத்தை வீணாக்கி வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.
English Summary
BJP MLA Vanathi Srinivasan condiment to DMK Govt MK Stalin