பாஜக அமைச்சரைஎதிர்த்த பாஜக எம்எல்ஏ மைதிலி தாகூர் - பீகார் சட்டப்பேரவையில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


பீகார் சட்டப்பேரவையில் இன்று பாஜக எம்.எல்.ஏ-வும், பிரபல பாடகியுமான மைதிலி தாகூர், தனது சொந்தக் கட்சியின் மூத்த அமைச்சரையே பகிரங்கமாக விமர்சித்தது அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.

அலிநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வான மைதிலி தாகூர், தனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் அவலநிலை குறித்துச் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டேவிடம் கேள்வி எழுப்பினார்.

மருத்துவமனைக் கட்டிடம் நல்ல நிலையில் இருப்பதாகவும், ஒரு சில 'சிறு பழுதுபார்ப்புகள்' மட்டுமே தேவைப்படுவதாகவும் மங்கல் பாண்டே எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்திருந்தார்.

மைதிலியின் பதிலடி: "அமைச்சரின் பதில் எனக்குச் சற்றும் திருப்தி அளிக்கவில்லை. நானே நேரில் சென்று பார்த்தேன்; அங்கு ஒரு சிறிய அறையில்தான் ஒட்டுமொத்த சுகாதார மையமும் இயங்குகிறது. முன்பு இரண்டு மருத்துவர்கள் இருந்தனர், தற்போது ஒருவர் கூட இல்லை" என ஆவேசமாகப் பேசினார்.

சுமார் 50,000 மக்கள் மற்றும் 7 பஞ்சாயத்துகள் இந்த ஒரு மருத்துவமனையைத்தான் நம்பியுள்ளன. நான் மிகச் சிறு வயதிலிருந்தே உங்களைப் பார்த்து வருகிறேன். மக்கள் நலனுக்காக இந்த மருத்துவமனையாவது முறையாகச் செயல்பட நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மூத்த அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினார்.


சொந்தக் கட்சியின் அமைச்சரையே 'எக்ஸ்போஸ்' செய்த மைதிலி தாகூரின் இந்தத் துணிச்சல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கட்சியைக் கடந்து மக்களின் குறையைப் பேசும் ஒரு நிஜமான மக்கள் பிரதிநிதியாக அவர் தற்போது பாராட்டுகளைப் குவித்து வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Truth over Party Lines Maithili Thakur Bold Assembly Stand


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->