"மேற்கு வங்கத்தில் எச்.ஐ.வி அதிர்ச்சி": 90 பேருக்குப் பாதிப்பு; சிக்கும் உயர்மட்ட அதிகாரிகள்!
Urban Outbreak 90 Professionals Test HIV Positive in West Bengal
கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் எச்.ஐ.வி பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-லிருந்து 90-ஆக உயர்ந்துள்ளது. இது வெறும் எண்ணிக்கை உயர்வு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் சமூகப் பின்னணிதான் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் யார்?
சமூகத்தின் உயர்மட்டப் பொறுப்புகளில் உள்ள பிரபல மருத்துவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மூத்த கார்ப்பரேட் அதிகாரிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது:
பரவலுக்கான காரணங்கள்:
சுகாதாரத் துறையின் முதற்கட்ட விசாரணையில் சில முக்கியமான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாகத் தன்பாலினச் சேர்க்கையாளர்களிடையே பாதுகாப்பற்ற முறையில் ஏற்பட்ட உடல் உறவு பாதிப்பு அதிகரிக்க முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் சமூக ஊடகங்கள் (Social Media Apps) வாயிலாக ஒருவருக்கொருவர் அறிமுகமாகி இணைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி ஜெயராம் ஹெம்பிரோம் தலைமையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் பணியிடங்களில் ரகசியக் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை.
மாவட்டம் முழுவதும் பாதுகாப்பான உறவு குறித்த தீவிர விழிப்புணர்வு முகாம்கள். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ஏஆர்டி (ART) சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள்.
சமூக அந்தஸ்தில் உயர்ந்திருப்பவர்களே இத்தகைய பாதிப்புக்குள்ளாவது, கல்வி மற்றும் அந்தஸ்தைத் தாண்டி "பாதுகாப்பான உடல் உறவு" குறித்த விழிப்புணர்வு எந்தளவுக்கு அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
English Summary
Urban Outbreak 90 Professionals Test HIV Positive in West Bengal