வசூல் வேட்டையில் ‘TN2026’! லியோ லிப் லாக் சீனும்.. விஜய் - சங்கீதா விவாகரத்து சண்டையும்.. அப்படியே TN2026ல குசும்புதான்!
TN2026 in the hunt for collections Leo lip lock scene Vijay Sangeetha divorce fight It just Kusumbu in TN2026
நட்டி நட்ராஜ் நடிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘TN2026’ திரைப்படம், வெளியான முதல் மூன்று நாட்களில் சுமார் 1.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு நட்டி நட்ராஜ் நடித்த படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்காத நிலையில், இந்த படம் குறுகிய காலத்திலேயே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படத்தின் வரவேற்புக்கு முக்கிய காரணமாக சர்ச்சைகள் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, முன்னணி நடிகர்களை நையாண்டி செய்யும் வகையில் சில காட்சிகள் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது. சிலர், படம் முழுவதும் மறைமுகமாக நடிகர் விஜயை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கின்றனர்.
படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள், விஜய்யின் சமீபத்திய திரைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை ஒத்துபோவதாக கூறப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்துள்ளது. குறிப்பாக, ‘லியோ’ திரைப்படத்தை நினைவூட்டும் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயை அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்றும், அவர் மீது முழு மரியாதையும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சர்ச்சையை அடக்க முயற்சி செய்யப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் எந்த நேரடி எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் சூழலில், இதையும் அவ்வாறே சமாளிக்கிறார் என அரசியல் மற்றும் திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மொத்தத்தில், ‘TN2026’ திரைப்படம் அதன் உள்ளடக்கத்தைக் காட்டிலும் சர்ச்சைகளால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவாதங்கள் தொடர்ந்தால், படம் வசூலில் மேலும் முன்னேற்றம் காணுமா அல்லது எதிர்ப்பு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
English Summary
TN2026 in the hunt for collections Leo lip lock scene Vijay Sangeetha divorce fight It just Kusumbu in TN2026