கல்லூரி மாணவி தலை துண்டித்து கொடூரமாகப் படுகொலை - கொலையாளியைப் பிடித்த பொதுமக்கள்! அதிர்ச்சி பின்னணி..!
Savage Daylight Murder in Himachal College Student Brutally Killed in Mandi Accused Captured by Locals
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள சர்க்காட் பகுதியில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. நைன் கிராமத்தைச் சேர்ந்த சியா குலேரியா (Siya Guleria) என்ற மாணவி, நேற்று (ஏப்ரல் 13, 2026) காலை 9:30 மணியளவில் தனது கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, கோபால்பூர் பேருந்து நிறுத்தம் அருகே வழிமறித்துக் கொலை செய்யப்பட்டார்.
விகாஸ் பாட்டியால் (Vikas Patiyal) என்ற 36 வயது நபர், அந்த மாணவியை அரிவாளால் தாக்கி, அவரது கழுத்தை அறுத்ததுடன் உடல் முழுவதும் பலமுறை குத்திக் கொலை செய்துள்ளார். இத்தாக்குதலில் படுகாயமடைந்த சியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கொடூரச் செயலைச் செய்துவிட்டுத் தப்பியோடிய விகாஸ், அருகில் இருந்த வயல்வெளிகளில் மறைந்திருந்தார். இருப்பினும், ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரைத் தேடிப் பிடித்து, தர்ம அடி கொடுத்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், விகாஸ் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், மாணவி அவரது ஒருதலைக் காதலை நிராகரித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இக்கொலையைச் செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மண்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜெய் ராம் தாக்கூர் மற்றும் மகளிர் ஆணையத் தலைவி வித்யா நேகி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "தேவபூமி" என்று அழைக்கப்படும் இமாச்சலத்தில் இத்தகைய கொடூரங்கள் நிகழ்வது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவைக் காட்டுவதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.
English Summary
Savage Daylight Murder in Himachal College Student Brutally Killed in Mandi Accused Captured by Locals