'நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்க'-னு சொன்னது ஒரு குற்றமா? கவர்ச்சி நடிகைக்கு இன்ஸ்டாவில் ரகசிய மெசேஜ் அனுப்பி சர்ச்சையில் சிக்கியுள்ள சஹால்..!
Cricketer Chahal lands in controversy after sending a message to a glamorous actress on Instagram
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
முன்னதாக சஹால் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோருக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு விவாகரத்து ஆகியுள்ளது.
அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களுக்கு மத்தியில், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது,'காந்தி பாத்' உள்ளிட்ட பல்வேறு வெப் தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை தானியா சட்டர்ஜி. நேற்று மீடியாவிடம் பேசுகையில் கிரிக்கெட் வீரர் சஹால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நேரிடையாக குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறி, தனது செல்போன் ஸ்கிரீன் ஷாட்டை கேமராக்கள் முன் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதில், 'நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்க’ என்று சஹால் குறிப்பிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சஹால் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனாலும், சஹாலுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை எனவும், இந்த செயல் தேவை தானா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாத பொருளாக மாற்றியுள்ளனர்.
English Summary
Cricketer Chahal lands in controversy after sending a message to a glamorous actress on Instagram