வானிலை மாற்றம் தொடக்கம்! சில இடங்களில் லேசான மழை...பல பகுதிகளில் கடும் வெப்பம்...! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Weather change begins Light rain some places severe heat many areas Meteorological Department warns
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, தமிழகத்தின் வானிலை நிலவரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய காரணமாக, தெற்கு அசாமிலிருந்து தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகா வழியாக சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 14 முதல் 20 வரை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள், ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. இதே நேரத்தில், தமிழகத்தின் பெரும்பாலான உள் பகுதிகளிலும் புதுவையிலும் வறண்ட வானிலை நிலவும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதிகபட்ச வெப்பநிலை குறித்து வெளியிடப்பட்ட முன்னறிவிப்பில், ஏப்ரல் 14 முதல் 18 வரை உள் தமிழக மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. அதே சமயம், கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.
இயல்பை விட அதிகமான வெப்பநிலை நிலவக்கூடிய இந்த காலகட்டத்தில், குறிப்பாக கடலோர தமிழகத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதால் மக்கள் அசௌகரியம் அனுபவிக்க நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு, அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 27 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.நாளை (அடுத்த நாள்) சென்னை நகரில் வானம் மீண்டும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியேயிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Weather change begins Light rain some places severe heat many areas Meteorological Department warns