நடிகர் அஜித்தின் தாயார் மறைவு... முக ஸ்டாலின் இரங்கல்!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.

மறைந்த தாயார் மோகினியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் அஜித் குமாரின் இல்லத்தில் இறுதிச்சடங்குகள் முறைப்படி நடைபெறவுள்ளன.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.

அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mk Stalin dmk condolence to Actor Ajith Kumars Mother Mohini Passes Away


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->