தயாநிதி மாறன் மகனுக்காக கதை ஷார்ட்ஸ் விழாவில் கலந்துகொண்ட அஜித் மகள் அனோஷ்கா! களைகட்டிய நிகழ்ச்சி! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகை ஷாலினியின் மகள் அனோஷ்கா அஜித், சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற ‘கதை ஷார்ட்ஸ்’ (Kadha Shorts) செயலி அறிமுக விழாவில் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுவாக தனது தாய் ஷாலினியுடன் மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் தோன்றும் அனோஷ்கா, இந்த முறை நண்பர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் உறவினரும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மகனுமான கரண் தயாநிதி மாறன், இளைஞர்களை இலக்காகக் கொண்டு ‘கதை ஷார்ட்ஸ்’ என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலி மூலம் 2 நிமிட எபிசோடுகளாக உருவாக்கப்பட்ட மினி தொடர்களைப் பார்க்க முடியும். குறுகிய நேரத்தில் தரமான கதை சொல்லும் முயற்சியாக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த செயலியில் நடிகையும் இயக்குநருமான ரோகிணி இயக்கிய ‘அவள் = அவன்?’, நடிகர் யூகி சேது உருவாக்கிய ‘மன்மதலீலை’ உள்ளிட்ட பல குறும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், திரைப்படத் துறையில் நுழைய விரும்பும் இளம் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்கும் தளமாகவும் இது செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிமுக விழாவில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், அனோஷ்கா அஜித்தின் வருகை தனிப்பட்ட கவனத்தைப் பெற்றது. கல்லூரி படிப்பை முடித்துள்ள அனோஷ்கா, தனது நண்பர்களான கரண் தயாநிதி மாறன் மற்றும் சபரிஷ் வெங்கட் உள்ளிட்டோரின் அழைப்பின் பேரில் விழாவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அம்மா ஷாலினி இல்லாமல், தனது நண்பர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனோஷ்காவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதையடுத்து, அஜித் ரசிகர்களும் பொதுமக்களும் அவரின் எளிமையான தோற்றத்தையும், தன்னம்பிக்கையான பொது நிகழ்ச்சி பங்கேற்பையும் பாராட்டி வருகின்றனர்.

அனோஷ்கா திரைத்துறையில் அறிமுகமாகப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து குடும்பத்தினர் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், அவரது சமீபத்திய பொது நிகழ்ச்சி பங்கேற்பு ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajith daughter Anoshka attended the short story festival for Dayanidhi Maran son A spectacular event


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->