நடிகர் அஜித் தாய் மறைவு... தலைவர்கள் இரங்கல்!
admk EPS BJP ANNAMALAI condolence to Actor Ajith Kumars Mother Mohini Passes Away
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும், கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பாஜக அண்ணாமலை விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
English Summary
admk EPS BJP ANNAMALAI condolence to Actor Ajith Kumars Mother Mohini Passes Away