''Being The Salman Khan''; நடிப்பு பயிற்சி அளிப்பதற்காக புதிய யூடியூப் சேனல் தொடங்கிய சல்மான்..! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகர் சல்மான்கான் புதிய யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே திரைப்படப் பிரபலங்களான ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, கார்த்திக் ஆர்யன், வருண் தவான், ஷில்பா ஷெட்டி மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்களான அல்லு அர்ஜுன், மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்கள் யூடியூப் தளத்தை கொண்டுள்ளனர்

இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு 'சல்மான்கான் பிலிம்ஸ் மியூசிக்'என்ற பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கிய சல்மான்கானுக்கு அதில் 30 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.

இந்த தொடர் வெற்றியின் அடுத்த கட்டமாக, மற்ற பிரபலங்களைப் போல அன்றாட வாழ்க்கை முறையை மட்டும் பகிராமல், நடிப்புப் பயிற்சி மற்றும் ஆளுமை மேம்பாட்டை ரசிகர்களுக்கு கற்றுக்கொடுக்கும் நோக்கில் 'பீயிங் தி சல்மான்கான்' என்ற தனது அதிகாரப்பூர்வ புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

இதில் அவர் நடிப்பு நுணுக்கங்கள், உடல் மொழி, முக பாவனைகள் மற்றும் தனது திரைத்துறை வெற்றிக்கு வித்திட்ட ரகசியங்களை ஒரு பயிற்சியாளராகவும், அதே வேளையில் கலையை ஆராயும் மாணவராகவும் இருந்து கற்றுக்கொள்ளவுள்ளார்.

சல்மான்கானின் புதிய 'பீயிங் தி சல்மான்கான்' என்ற யூடியூப் தளத்தில், இதுவரை 10 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளம்பரப்படுத்தியுள்ள சல்மான்கான், 'ஆரம்பத்தில் இருந்தே நாம் தொடங்குவோம், இது எனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், இதில் உங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் தொடக்கம் முதல் இறுதி வரை முழுமையாகக் கிடைக்கும்' என்று தெரிவித்துள்ளார். 

அதாவது, வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், தனது பல ஆண்டு கால திரைத்துறை அனுபவத்தை இளம் தலைமுறைக்கு பயனுள்ள பாடமாக மாற்றியுள்ள சல்மான்கானின் இந்த புதிய முயற்சிக்கு சினிமா ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salman launches a new YouTube channel to provide acting training


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->