டெல்லி To சென்னை விமானத்தில் பவர் பேங்க் வெடித்து தீ விபத்து: ஹைதராபாத்தில் அவசரமாகத் தரையிறங்கிய இண்டிகோ விமானம்..!
Fire incident caused by exploding power bank on Delhi To Chennai IndiGo flight
டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பவர் பேங்க் வெடித்து தீ பிடித்ததால் குறித்த விமானம் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் விமானம் (6E 6115) இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தபோது திடீரென விமானத்தின் பயணிகள் உடைமைகளை வைக்கும் மேல்புற அறையில் தீப்பற்றியுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் பையில் இருந்த பவர் பேங்க் சாதனம் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் உடனடியாக தங்களின் உடைமைகளை அங்கிருந்த அப்புறப்படுத்தத் தொடங்கியதால், விமானத்தில் சலசலப்பு ஏற்பட்ட்டுள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகளின்படி இண்டிகோ விமானம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாகத் திருப்பி விடப்பட்ட நிலையில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இந்த விமானத்தில் பயணித்த பயணிகளைச் சென்னைக்கு அழைத்துச் வர மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Fire incident caused by exploding power bank on Delhi To Chennai IndiGo flight