இமயமலைப் பகுதியில் மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க நாளை அடிக்கல் நாட்டும் ஜெ.பி. நட்டா..!
JP Nadda to lay the foundation stone for a medical research center in the Himalayan region tomorrow
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, இமாச்சலப் பிரதேசத்தின் கீலாங்கில், நாளை (அக்டோபர் 12), ஐசிஎம்ஆர் உயரமான மலைப்பகுதி மருத்துவ, பொது சுகாதார ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, நாட்டுக்காக அர்பணிக்கவுள்ளார்.
இந்தியாவின் உயரமான, பருவநிலை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை மையமாகக் கொண்ட பன்முக ஆராய்ச்சி, புத்தாக்கம், திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், இந்த மையம் நிறுவப்படுகிறது.
இமயமலைச் சூழலமைப்பு, அதன் உயரமான மலைப்பகுதி, கடுமையான பருவநிலை, கடினமான நிலப்பரப்பு, புவியியல் ரீதியான ஒதுங்கிய தன்மை போன்ற பொது சுகாதாரச் சவால்கள் இப்பகுதியின் உள்ளன.
இந்தக் காரணிகள் நோய்களின் தன்மை, சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல், அவசரகால சகிச்சை ஆகியவற்றில் எதிரொலிக்கின்றன. இந்த சவாலான சூழல்களில் வாழும் மக்களுக்காக, சூழலுக்கு ஏற்ற, சிறந்த சுகாதார ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, சிறந்த தீர்வுகளை வழங்குவதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
JP Nadda to lay the foundation stone for a medical research center in the Himalayan region tomorrow