அஜித் தாயார் மோகினி மறைவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் உருக்கமான இரங்கல் செய்தி! - Seithipunal
Seithipunal


பிரபல முன்னணி திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி (84) அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை காலமானார். சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்த அவரது திடீர் மறைவுச் செய்தி கேட்டு, ஒட்டுமொத்தத் திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தி:

நடிகர் அஜித்தின் தாயார் மறைந்த செய்தி அறிந்தவுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ இரங்கல் செய்தியை மிகவும் உருக்கமாக வெளியிட்டுள்ளார்.

அதில், "அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deeply Saddened by the Demise of Friend Ajiths Mother CM Joseph Vijay Extends Heartfelt Condolences


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->