இனிப்பும் காரமும் ஒரே டிஷில்...! - சிலியின் Pastel de Choclo உலக சுவை மேடையில் ஹிட்...!
Sweet and spicy one dish Chile Pastel de Choclo hits world taste stage
Pastel de Choclo என்பது சிலி நாட்டின் பாரம்பரிய உணவு. இதன் மேல் பகுதி இனிப்பான சோள விழுதால் (corn paste) செய்யப்பட்டிருக்கும்; கீழே கார சுவையுடன் மாமிச கலவை இருக்கும். இந்த உணவில் இனிப்பு, உவர்ப்பு, சிறிய காரம்,all in one என்ற மாதிரி இருக்கும். பொதுவாக குடும்ப விழாக்கள், கொண்டாட்டங்கள் போன்ற நேரங்களில் இந்த உணவை சமைத்து பரிமாறுவார்கள். இது ஒரு “comfort food” ஆகவும் கருதப்படுகிறது.
தேவையான பொருட்கள் (Ingredients):
இனிப்பு சோளம் (Sweet corn) – 2 கப்
கோழி அல்லது மாட்டிறைச்சி – 250 கிராம்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
பூண்டு – 4 பல்
முட்டை – 2 (வேக வைத்தது)
ஒலிவ் (Olives) – சிறிதளவு
திராட்சை (Raisins) – 2 டேபிள் ஸ்பூன்
பால் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சீரகம்/மசாலா தூள் – சிறிதளவு
எண்ணெய் அல்லது வெண்ணெய் – தேவைக்கு

செய்முறை (Preparation Method):
முதலில் சோளத்தை அரைத்து, அதில் பால் சேர்த்து க்ரீமியாக ஒரு விழுது போல தயார் செய்யவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் பூண்டு வதக்கவும்.
அதில் மாமிசத்தை சேர்த்து நன்றாக வேகவிடவும். உப்பு, மிளகு, மசாலா சேர்த்து கலக்கவும்.
இப்போது ஒரு பேக்கிங் பாத்திரத்தில் (அல்லது கடாயில்) கீழே இந்த மாமிச கலவையை பரப்பவும்.
அதன் மேல் வேக வைத்த முட்டை துண்டுகள், ஒலிவ், திராட்சை சேர்க்கவும்.
அதன் மேல் சோள விழுதை முழுவதும் பரப்பவும்.
இதை ஓவன் அல்லது அடுப்பில் மிதமான சூட்டில் பொன்னிறமாக வரும் வரை சுடவும்.
மேலே சிறிது வெண்ணெய் தடவி சூடாக பரிமாறவும்.
சிறப்பு என்ன?
இந்த Pastel de Choclo உணவில் இனிப்பு சோளம் மேலே, காரமான மாமிசம் கீழே இருக்கும். இதனால் ஒவ்வொரு கவ்வியிலும் வேறுபட்ட சுவை கிடைக்கும். இதுதான் இந்த உணவின் மிகப்பெரிய சிறப்பு.
English Summary
Sweet and spicy one dish Chile Pastel de Choclo hits world taste stage