லோகேஷ் யுனிவர்ஸில் அடுத்த மாஸ் தில்லாலங்கடி...! ராகவா லாரன்ஸ் - நிவின் பாலி மோதும் ‘பென்ஸ்’ படத்தில் ரவி மோகன் என்ட்ரி...! - Seithipunal
Seithipunal


இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘பென்ஸ்’ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.‘ரெமோ’, ‘சுல்தான்’ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

அதிரடி மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.மேலும், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி வலுவான எதிர்மறை கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.திரைப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜே உருவாக்கியுள்ள நிலையில், இது அவரது புகழ்பெற்ற ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ கதையுலகின் ஒரு பகுதியாக அமையவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அடுத்தகட்ட காட்சிகள் தீவிரமாக படமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், ‘லியோ’ திரைப்படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட அரங்க அமைப்புகளிலேயே ‘பென்ஸ்’ படத்தின் சில முக்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில், நடிகர் ரவி மோகன் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதன்மூலம் ரவி மோகன் முதல் முறையாக லோகேஷ் கனகராஜின் சினிமா பிரபஞ்சத்தில் காலடி எடுத்து வைக்கிறார்.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ரவி மோகனின் வருகையை வரவேற்கும் விதமாக சிறப்பு தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக விளம்பரப் போஸ்டரையும் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த புதிய இணைவு, ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lokesh Universe next mass thriller Ravi Mohan entry Raghava Lawrence Nivin Pauly clashing benz


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->