திரையுலகில் பெரும் சோகம்! நடிகர் அஜித்தின் தாயாருக்கு இறுதிச்சடங்கு நிறைவு ! - கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்! - Seithipunal
Seithipunal


தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் அஜித்குமார், திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கேற்று தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். பந்தயப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர் தற்போது துபாயை தளமாகக் கொண்டு வசித்து வருகிறார்.

அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம், கடந்த 2023-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அதன்பிறகு அவரது தாயார் மோகினி மணி, சென்னையின் பாலவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார்.வயோதிகம் மற்றும் நீண்டநாள் உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மோகினி மணி (84), நேற்று உயிரிழந்தார்.

இந்த துயரச் செய்தியை அறிந்த அஜித்குமார், துபாயில் இருந்து அவசரமாக சென்னை திரும்பினார்.அவரது தாயார் மறைவு செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

அரசியல் தலைவர்கள், திரைப்படப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறையினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.இந்த நிலையில், மோகினி மணியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றன.

ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானம் வரை இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அமரர் ஊர்தியைத் தொடர்ந்து அஜித்குமார் மற்றும் உறவினர்கள் பயணித்தனர்.

உறவினர்களின் முன்னிலையில், மறைந்த தாயாரின் உடலை அஜித்குமார் தாமாகவே தோளில் சுமந்து மின்மயான வளாகத்திற்குள் எடுத்துச் சென்ற காட்சி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இறுதி மரியாதைகள் மற்றும் சடங்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மோகினி மணியின் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயாருக்கு மகனாக அஜித்குமார் செலுத்திய இறுதி அஞ்சலி, அங்கிருந்தவர்களின் மனதை உருக்கியதாக அமைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

great tragedy film industry funeral actor Ajith mother complete family tears


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->