மழை பெய்தாலே விற்பனை சூடுபிடிக்கும் Sopaipillas…! - பூசணிக்காய் ஸ்நாக்ஸுக்கு சிலி மக்களிடம் அமோக வரவேற்பு...!
Sopaipillas sell well when it rains Pumpkin snacks hit Chileans
Sopaipillas என்பது Chile நாட்டின் மிகவும் பிரபலமான தெரு உணவுகளில் ஒன்றாகும். பூசணிக்காய் மற்றும் மாவு கலந்து தயாரிக்கப்படும் இந்த ஸ்நாக்ஸ், எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கப்படுகிறது. இனிப்பு syrup உடனோ அல்லது கார சாஸ் உடனோ பரிமாறப்படுவதால், இரண்டு விதமான சுவைகளிலும் இதை ரசிக்க முடியும். குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் அதிகம் விரும்பப்படும் உணவாக இது அறியப்படுகிறது.
தேவையான பொருட்கள் (Ingredients)
பூசணிக்காய் – 250 கிராம்
மைதா மாவு – 2 கப்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
இனிப்பு பரிமாற:
வெல்ல பாகு அல்லது சர்க்கரை syrup – 1 கப்
கார பரிமாற:
சில்லி சாஸ் அல்லது கார சட்னி – தேவையான அளவு

செய்முறை (Preparation Method)
பூசணிக்காயை வேக வைத்து நன்றாக மசித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்க்கவும்.
அதில் மசித்த பூசணிக்காயை சேர்த்து மென்மையான மாவாக பிசையவும்.
மாவை 20 நிமிடங்கள் ஓய்வெடுக்க வைக்கவும்.
பின்னர் மாவை சப்பாத்தி போல தேய்த்து வட்ட வடிவில் வெட்டவும்.
சூடான எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரிக்கவும்.
இனிப்பு சுவைக்காக syrup உடனும், கார சுவைக்காக சாஸ் உடனும் பரிமாறலாம்.
சிறப்பு என்ன?
Sopaipillas-ன் முக்கிய சிறப்பு அதன் மென்மையான உள்ளமைப்பும் குருமுருப்பான வெளிப்புறமும் ஆகும். பூசணிக்காய் சேர்ப்பதால் தனித்துவமான சுவையும் மணமும் கிடைக்கிறது. இனிப்பாகவும் காரமாகவும் சாப்பிடக்கூடிய இந்த உணவு, சிலி தெரு உணவுக் கலாச்சாரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. குறிப்பாக மழைநாள்களில் சூடாக பரிமாறப்படும் Sopaipillas, பலரின் விருப்பமான ஸ்நாக்ஸாக உள்ளது.
English Summary
Sopaipillas sell well when it rains Pumpkin snacks hit Chileans