எடப்பாடி தொகுதியில் 50-க்கும் மேற்பட்ட தவெகவினர், இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைவு..!
In the Edappadi constituency more than 50 TVKV members join the AIADMK in the presence of EPS
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிப்பெற்றதற்கு பின்னர் இன்று முதல் முறையாக தனது தொகுதிக்கு சென்றார். தேர்தல் முடிந்து 28 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக இன்று வந்தார். அவருக்கு, கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
அதேநேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைந்துக் கொண்டனர்.
முன்னதாக, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதியில் எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து, அவர் நன்றி தெரிவித்தார். பின்னர் எடப்பாடி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒன்றிய, நகர, பேரூர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் பயணியர் மாளிகையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
அந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் பெற்ற வாக்குகள் குறித்தும், நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதோடு, நிர்வாகிகளுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். அதனை தொடர்ந்து, பல்லடம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நடராஜன், அவரது ஆதரவாளர்களுடன் வந்து பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
English Summary
In the Edappadi constituency more than 50 TVKV members join the AIADMK in the presence of EPS