பிசிசிஐ ஏற்குமா...? ஐபிஎல் கிரிக்கெட்டில் இதை மாத்தணும்...! - சச்சின் டெண்டுல்கர் கொடுத்த மாஸ்டர் பிளான்...! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானும், முன்னாள் நட்சத்திர வீரருமான சச்சின் தெண்டுல்கர், டி20 கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் இடையிலான சமநிலையை மீட்டெடுக்க சில முக்கிய மாற்றங்கள் தேவை என வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் பேசியபோது, தற்போது நடைமுறையில் உள்ள ‘இம்பேக்ட் வீரர்’ விதி போட்டியின் இயல்பான சமநிலையை பாதிப்பதாக கருத்து தெரிவித்தார்.

டி20 கிரிக்கெட் என்பது 20 ஓவர்களுக்குள் நடைபெறும் சுருக்கமான ஆட்ட வடிவமாகும். இத்தகைய சூழலில் அணிகளுக்கு கூடுதலாக ஒரு பேட்டரை களமிறக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது, ஏற்கனவே கடினமான சவால்களை எதிர்கொண்டு வரும் பந்துவீச்சாளர்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விதிமுறையால் ஆட்டம் ஒருதலைப்பட்சமாக மாறும் அபாயம் இருப்பதாகவும், பேட் மற்றும் பந்து இடையிலான இயல்பான போட்டித்தன்மை குறைந்து வருவதாகவும் சச்சின் தெரிவித்தார்.மேலும், தற்போது அமலில் உள்ள 6 ஓவர் சக்தி வாய்ந்த தொடக்க ஆட்டப் பகுதியை இரு கட்டங்களாகப் பிரிக்கலாம் என்ற புதிய யோசனையையும் அவர் முன்வைத்தார்.

அதன்படி, முதல் 4 ஓவர்கள் பேட்டர்களுக்கான சாதகமான கட்டமாக தொடரலாம். இந்த கட்டத்தில் தற்போது உள்ளதுபோல இரு களத்தடுப்பு வீரர்கள் மட்டுமே உள்வட்டத்திற்கு வெளியே நிற்க அனுமதிக்கப்படலாம்.அதன் பின்னர், பந்துவீச்சு அணிக்கு தனியான சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த வாய்ப்பை அணித்தலைவர் தனது விருப்பத்திற்கேற்ப எந்த நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் கூடுதலாக ஒரு களத்தடுப்பு வீரரை உள்வட்டத்திற்கு வெளியே நிறுத்த அனுமதித்தால், பந்துவீச்சாளர்களுக்கும் ஆட்டத்தில் தாக்கம் செலுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும் என சச்சின் கருத்து தெரிவித்தார்.அதேபோல், ஒரு பந்துவீச்சாளர் தற்போது அனுமதிக்கப்படும் 4 ஓவர்களுக்கு பதிலாக 5 ஓவர்கள் வரை வீச அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறந்த திறமையுள்ள பந்துவீச்சாளர் கூடுதலாக ஒரு ஓவர் வீசுவதை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்றும், பேட்டர்கள் முழு 20 ஓவர்களும் களத்தில் நிற்கும் சூழலில், பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் ஓவர் வழங்குவதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

டி20 கிரிக்கெட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக பேட்டர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will BCCI accept it This needs changed IPL cricket Sachin Tendulkar master plan


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->