பவுன் வாங்குவோருக்கு குட் நியூஸ்...! தொடர்ந்து இறங்கும் தங்கம் விலை...! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா...?
Good news bullion buyers Gold prices continue fall Do you know what price situation today
சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் மாற்றங்கள், உலக நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் மற்றும் முதலீட்டு சந்தையின் ஏற்ற, இறக்கங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் தங்கத்தின் விலை தொடர்ந்து நிலையற்ற போக்கில் பயணித்து வருகிறது.
இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களும், முதலீட்டாளர்களும் தினசரி விலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு பதிவானது. அப்போது 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,150-க்கும் விற்பனையானது.
அதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் விலை உயர்ந்து, சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1,05,440-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.30 குறைந்து ரூ.13,150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரே சில நாட்களுக்குள் தங்கம் விலையில் தொடர்ச்சியான ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவது நகை வியாபாரிகளையும் வாங்குபவர்களையும் கவனிக்க வைத்துள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று எந்த மாற்றமும் பதிவாகவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
English Summary
Good news bullion buyers Gold prices continue fall Do you know what price situation today