சென்னை மாநகராட்சியில் அதிரடி வேட்டை...! லஞ்சம், முறைகேடு புகாரில் சிக்கிய 6 அதிகாரிகள் ‘சஸ்பெண்ட்’...! - ஆணையர் ச அதிரடி உத்தரவு...! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியில் நிதி முறைகேடு, டெண்டர் விதிமீறல், லஞ்சப் புகார்கள் மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4 மூத்த அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை மாநகராட்சி நிர்வாக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அதிகாரிகள் மீது, பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், ஒப்பந்தப் பணிகளில் விதிமீறல்கள் நடைபெற்றதாகவும், லஞ்சம் பெற்றதாகவும், வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பணம் பெற்றதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வந்தன.

இந்த புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, புகார்களுக்கு உள்ளான 4 மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட மொத்தம் 6 பேர் மீது சென்னை மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து, அவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், குற்றச்சாட்டுகள் தீவிரமாக உள்ள 4 பேர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யவும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது எவ்வித சமரசமும் இல்லாத அணுகுமுறையை மாநகராட்சி கடைப்பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ரூ.9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக போலியான ரசீதுகளை சமர்ப்பித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அலுவலராக பணியாற்றிய டாக்டர் தேவிகலா கடந்த ஜூலை 9-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த விவகாரத்திலும் தனித்தனி விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action hunt Chennai Corporation 6 officials caught bribery and corruption complaints suspended Commissioner orders action


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->