திமுகவிற்கு தோல்வி பயம் வரும்போதெல்லாம் அவர்கள் எடுக்கும் ஒரே ஆயுதம் ரவுடியிசம் - தவெக கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ரமேஷ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "திமுகவிற்கு தோல்வி பயம் வரும்போதெல்லாம் அவர்கள் எடுக்கும் ஒரே ஆயுதம் ரவுடியிசம்! 

சென்னையில் தமிழக வெற்றிக் கழக தோழர்கள் வீடு வீடாக சென்று கழகப் பணியாற்றிய போது தோல்வி பயம் அதிகமாகி ஆளும் திமுக தரப்பு அவர்கள் மீது வன்முறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 

கோயில் கோயிலாக சென்று நாடக வேடம் போடும் அமைச்சர் நாடக பாபு இது போன்ற வன்முறை வெறியாட்டங்களை நடத்தி அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று நினைத்தால் அந்த இறைவனே உங்களை ஓட ஓட விரட்டப்போவது நிச்சயம்! 

பாதிக்கப்பட்ட தோழர்களும், தோழிகளும் விரைவில் குணமடைந்து வர வேண்டும்! முன்பை விட இன்னும் பல மடங்கு வேகத்துடன், துணிவுடன் களப்பணி செய்து இந்த ரவுடிகளின் கூடாரத்தை ஆட்சியில் இருந்து அகற்ற உழைக்க வேண்டும்! 

நம் கழகத் தலைவரும், கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும், கழக கண்மணிகளும் என்றும் துணையாக நிற்போம்" என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Ramesh condemn to DMK Mk Stalin


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->