தமிழக தேர்தல் 2026: அதிகாரிகள் உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யுங்க - தேர்தல் ஆணையம் உத்தரவு!
tn election 2026 ec order
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், 'அதிகாரத் தூய்மையை' உறுதி செய்ய இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நியாயமாகவும், எவ்வித உள்நோக்கமின்றியும் நடைபெறுவதை உறுதி செய்ய, 6 மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்குப் பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன:
3 ஆண்டுகால விதி: ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றும் அதிகாரிகள் உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
சொந்த மாவட்டத் தடை: அதிகாரிகள் தங்கள் சொந்த மாவட்டங்களிலேயே (Home Districts) தேர்தல் பணிகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல்: தற்போது சிறப்புத் திருத்தப் பணிகள் (SSR) முடிவடைந்து, இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.
நேரடி ஆய்வு: விரைவில் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு நேரில் சென்று, சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.
அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மும்முரமாக இருக்க, தேர்தல் ஆணையமோ நிர்வாக ரீதியிலான பணிகளில் வேகம் காட்டி வருகிறது.
English Summary
tn election 2026 ec order