'ஹமாஸ் தளபதி யுசுப் முகமது ஜூமா உள்ளிட்ட 20 பேர் கொல்லப்பட்டனர்'. இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு..!
Israeli military says 20 people killed including Hamas commander
ஒரே மாதத்தில் ஹமாஸ் தளபதிகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 2023இல் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்; அப்போது 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை தொடுத்தது. குறித்த போர் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், இதுவரை 62,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய ஹமாஸ் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

இஸ்ரேலில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 07இல் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றிய ஹமாஸ் தளபதி யுசுப் முகமது ஜூமா உள்ளிட்ட 20 பேர் கடந்த ஒரு மாதத்தில் கொல்லப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 30 குடியிருப்பு கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் அழித்ததுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் அமைப்பின் கடைசி பெரிய கோட்டையான காசா நகரத்தை விரைவில் கைப்பற்றுவோம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Israeli military says 20 people killed including Hamas commander