விஜய் சேதுபதி குரலில் காதல் கதை சொல்லி…!- ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய 'kiss ' படக்குழு!
Telling love story Vijay Sethupathis voice Kiss film crew shocked fans
தமிழ் சினிமாவின் முன்னணி நடன அமைப்பாளராக வலம் வந்த சதீஷ், இப்போது இயக்குனர் அவதாரத்தில் திரையுலகை கவரத் தயாராகியுள்ளார். அவர் இயக்கும் முதல் படமாக "கிஸ்" உருவாகியுள்ளது."டாடா" மற்றும் "ப்ளடி பெக்கர்" போன்ற வெற்றிப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கவின், இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும், அயோத்தி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி, இந்த படத்தில் கவினுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இந்த படத்தை தயாரிக்க, ஒளிப்பதிவை ஹரீஷ், எடிட்டிங்கை ஆர்சி பிரனவ் கவனிக்க, இசையை ஜென் மார்டின் அமைத்துள்ளார்.
அண்மையில், வெளியிடப்பட்ட டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "லிப்லாக் முத்தம் கொடுக்கும் காதலர்களின் காதல் கதையின் முடிவு எப்படியாகும்?" என்ற கேள்வியை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
இதன் மூலம் ஒரு வித்தியாசமான காதல் சிக்கலை சதீஷ் திரையில் ஆவணமாக்கியுள்ளார்.அதிலும் சிறப்பு என்னவெனில், இந்த படத்தில் கதை சொல்ழும் நபராக தனக்கே உரிய குரலில் இணைந்துள்ளார் நடிகர் 'விஜய் சேதுபதி'.
அவரின் தனித்துவமான குரல், படத்தின் கவர்ச்சியை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி,"கிஸ்" படம் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
English Summary
Telling love story Vijay Sethupathis voice Kiss film crew shocked fans