8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 19 வயது கொடூர இளைஞன்!
UP Young man arrested posca case
உத்தரப் பிரதேசம் அலிகர் புறநகரில், இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி பாலியல்துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி படிக்கும் பள்ளியின் காவலாளியின் மகன் கோலு (19) என்பவன், வெள்ளிக்கிழமை அந்தச் சிறுமியை தனது அறைக்குள் பூட்டி துன்புறுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி கூச்சலிட்டு எதிர்த்ததன் மூலம் தப்பித்து வெளியேறியுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளி கோலுவை கைது செய்தனர். பிஎன்எஸ் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுமிக்கு உரிய பாதுகாப்பும் உதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியும் கடும் கவலையும் அடைந்துள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், பள்ளி வளாகங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலியுறுத்தும் குரல்கள் எழுந்துள்ளன.
English Summary
UP Young man arrested posca case