பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்து வருகிறது... பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு!
Prime Minister Modi Assam speech congress Pakistan
பிரதமர் நரேந்திர மோடி, வடகிழக்கு மாநிலங்களுக்கு நேற்று தொடங்கிய பயணத்தைத் தொடர்ந்து மிசோரம், மணிப்பூர் ஆகிய இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அசாம் மாநிலம் தர்ரங்கில் நடைபெற்ற டாக்டர் பூபேன் ஹசாரிகா நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, ரூ.6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
பிரம்மபுத்திரா நதிக்குப் பாலம் அமைக்கும் குருவா–நரேன்கி திட்டம், கவுகாத்தி ரிங் ரோடு உள்ளிட்ட பல பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், 1962 சீன ஆக்கிரமிப்பில் நேரு அசாம் மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை என்றார். பாஜக இரட்டை எஞ்சின் அரசு அசாமின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை முன்னேற்றவும் உறுதியாக செயல்படுகிறது என்றும் கூறினார்.
அசாமின் 13 சதவீத வளர்ச்சி, இந்தியாவின் வேகமான பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும், காங்கிரஸ் பல தசாப்தங்கள் ஆட்சி செய்த போதும் 3 பாலங்களை மட்டுமே கட்டியதாகவும், ஆனால் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 6 பாலங்களை அமைத்ததாகவும் மோடி சுட்டிக்காட்டினார்.
மேலும், காங்கிரஸ் ராணுவத்தை அவமதித்து, பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை மறைமுகமாக ஆதரிக்கிறது என்று குற்றம்சாட்டினார். மக்கள் தொகையை மாற்றும் சதி முயற்சிகளை பாஜக தடுக்கப் போவதாகவும் அவர் உறுதி தெரிவித்தார்.
English Summary
Prime Minister Modi Assam speech congress Pakistan