ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானுக்கு தர்ம அடி கொடுத்து இலகு வெற்றியீட்டிய இந்தியா..! 
                                    
                                    
                                   India beat Pakistan in the Asia Cup league match
 
                                 
                               
                                
                                      
                                            17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டம் இன்று பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு களமிறங்கியது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சையிம் ஆயுப், பர்ஹான் களமிறங்கினர். முதல் ஓவரில்லையே ரன் எதுவும் எடுக்காமல் சையிம் ஆயுப் (0 ரன்) கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 02-வது பும்ரா ஓவரில் 03 ரன்கள் எடுத்திருந்த கேட்ச் மூலம் அவரும் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பர்ஹான் நிதானமாக ஆடி 40 ரங்களில் குலதீப் யாதவின் பந்து வீச்சில், ஹர்திக் பாண்டியவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து, பகர் சமான் 17 ரன்னிலும், சல்மான் 03 ரன்கள், ஹாசன் நவாஸ் 05 ரன்கள், மொஹமட் நவாஸ் (0), பாஹிம் அஷ்ரப் 11 ரன்கள், ஷாஹீன் ஷான் அபிரிட்டி 33 ரன்கள் காட்டமளிக்காமலும், 09 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்துள்ளனர். இந்திய அணி சார்பில், அபராமம பந்து வீசிய குல்தீப் யாதவ், 03 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி தலா 01, பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் தலா 02 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
129 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேஷ் சர்மா மற்றும் துணை கேப்டன் கில் ஆகியோர் முதலில் களமிறங்கினர். இதில் கில் 10 ரங்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 31 ரண்களிலும் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அணியின்  கேப்டன் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா களமிறங்கினர். இதில் திலக் வர்மா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிவம் தூபே களமிறங்கினார். இறுதியில் சூர்யகுமார் யாதவ் நான்கு 04  மற்றும் 0ரூ 06 அடித்து 47 ரன்களை எடுத்தும், சிவம் தூபே 10 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 
இறுதியில் 15.5 வர்களில் 131 ரன்களை எடுத்து இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. பாக்கிஸ்தான் அணி சார்பில் சையும் அயூப் 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
                                     
                                 
                   
                       English Summary
                       India beat Pakistan in the Asia Cup league match