விஜய் கூட்டணியில் அமமுக இணையுமா? டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி!
tvk vIJAY ammk ttv dHINAKARAN ALLIANCE
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், "தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என்பது உறுதி.
அதில் அமமுக இணையுமா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால், விஜய் தலைமையிலும், சீமான் தலைமையிலும் தனித்தனி கூட்டணிகள் அமையும். இதனால் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நடைபெறுவது உறுதி.
பாஜக கூட்டணியைப் பற்றி பேசும்போது, முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அவர் இருந்தால் எங்களுக்குக் கூட்டணி சாத்தியமில்லை. இதிலிருந்து மற்ற விவரங்களை புரிந்து கொள்ளலாம் என்றார்.
மேலும், விஜயின் பிரசாரத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதில் பெருமளவு இளைஞர்கள், இளம் பெண்கள், 40 வயதுக்குட்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இது ஒரு பெரிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், விஜய் ஜெயலலிதா பாணியில் பேசவில்லை. யாராவது அப்படிப் பேசினால் மகிழ்ச்சி தான், ஆனால் அதைக் கொண்டே மதிப்பிட வேண்டியதில்லை என்றார்.
பெரம்பலூரில் விஜய் நள்ளிரவு நேரத்தில் சென்றபோது, பிரசாரத்தை ரத்து செய்திருப்பது சரியான முடிவாக இருந்தது என்றும் தினகரன் தெரிவித்தார்.
English Summary
tvk vIJAY ammk ttv dHINAKARAN ALLIANCE