திமுகவின் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ..! - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து திமுக தரப்பில் வெளியான அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

'2026 மார்ச் 16 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 2 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMKs candidates for the Rajya Sabha elections are Trichy Siva and Constantine Ravindran


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->