டி20 உலகக் கோப்பை; சவுத் ஆபிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து; அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ள பின் ஆலன்..! - Seithipunal
Seithipunal


10 வது டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 09 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்காவின் மார்க்கிராம், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

டி காக் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கெல்டன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மார்க்கிராம்18 ரன்களில் அடுத்து வந்த பிரேவிஸ்  34 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் ஆட்டமிழந்தார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

தென் ஆப்பிரிக்கா அணி 77 ரன்களுக்குள் 05 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 06-வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ் உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தினமாக ஆடியது. விளையாடியது. இதில் யான்சன் அதிரடியாக விளையாடி ஸ்டப்ஸ் நிதானமாக விளையாடினார்.

பின்னர் ஸ்டப்ஸ் அதிரடி காட்டி, 29 ரன்கள் அடித்தார். யான்சன் 27 பந்தில் 02 பவுண்டரி, 05 சிக்சருடன் அரைசதம் கடந்து, 30 பந்துகளில், 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 08 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்றி, மெக்கோன்சி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 02 விக்கெட் வீழ்த்தினர்.

170 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. அணி சார்பாக செப்பர்ட் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பின் ஆலன் ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில், 100 ரன்கள் எடுத்து சத்தம் அடித்தார். ரச்சின் ரவீந்திரா 13 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி, 12.5 ஓவரில் 173 ரன்கள் அடித்து அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Zealand beat South Africa to enter final and Allen sets record by scoring fastest century


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->