மாநிலங்களவைத் தேர்தல்; பாமகவுக்கு ஒரு சீட் ஒதுக்கியுள்ள அதிமுக..!
AIADMK has allocated one seat to PMK in the Rajya Sabha elections
அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்த நிலையில், பாமக சார்பில் அன்புமணி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
AIADMK has allocated one seat to PMK in the Rajya Sabha elections