'இட்லி கடை' என்ற டைட்டில் பின்னால் இவ்வளவு பெரிய கதையா...?
Is there such big story behind title Idli Kadai
தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் 52-வது படமாகவும், ஜி.வி. பிரகாஷின் இசையோடு விருந்தளிக்கவிருக்கும், இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் சக்திவாய்ந்த வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க, வருகிற அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.

இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய தனுஷ் தெரிவித்ததாவது,"பொதுவாக நாயகனின் பெயரை டைட்டிலாக வைத்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் என் வாழ்வின் சின்ன வயது நினைவுகளும், நான் சந்தித்த நிஜ மனிதர்களும் தான் இட்லி கடை படத்தின் அடிப்படை.நான் என் சிறு வயதில் இருக்கும் போது பூக்களை பறித்து, அதை விற்று வாங்கி சாப்பிட்ட இட்லியின் ருசி, இன்றைய எந்த பிரமாண்ட ஹோட்டலிலும் கூட கிடைக்கவில்லை.
அந்த சுவையும் அந்த நினைவுகளும் தான் இந்த படத்தின் மையக்கரு.நாம் எப்போதும் நம்முடைய வேர்களை, நம்முடைய வரலாற்றை மறக்கக் கூடாது. இட்லி கடை படம் அந்த உண்மையை சொல்லும்.என்னை திரைப்படங்களில் பார்த்து ரசிக்கலாம்.
ஆனால் அதன் பின், உங்கள் குடும்பத்தோடு நேரம் செலவழியுங்கள். வாழ்க்கையின் உண்மையான செல்வம் அதுதான்” என்று தனுஷ் உருக்கமாக தெரிவித்தார்.
English Summary
Is there such big story behind title Idli Kadai