டி20 உலகக்கோப்பை தோல்வி: இந்தியாவுடன் தோற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு PCB மரண அடி.. சம்பளம் கட் + ரூ.50 லட்சம் அபராதம்! - Seithipunal
Seithipunal


டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றிலேயே வெளியேறிய பாகிஸ்தான் அணிக்கு, அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் (PCB) கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவிடம் லீக் சுற்றில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பாகிஸ்தான் மதிப்பில் ரூ.50 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16.28 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ‘எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டதாவது: “லீக் சுற்றில் இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்வி மற்றும் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் மீண்டும் தோல்வியடைந்தது அணியின் செயல்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது. இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது. ஐசிசி தொடர்களில் மீண்டும் மீண்டும் தோல்வி காணப்படுவதால் கட்டுப்பாட்டு நடவடிக்கை அவசியமானது” என PCB வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த அபராதத்தை முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் நியாயப்படுத்தியுள்ளனர். ஜாவேத் மியான்தத், “இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அரங்கில் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதை வீணடிக்கக்கூடாது. தற்போதைய டி20 கிரிக்கெட்டின் வேகத்துக்கு நமது வீரர்கள் இணைந்து செயல்படவில்லை” என விமர்சித்தார்.

முகமது யூசுப், “சிலருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்தும் பெரிய தொடர்களில் தோல்வி அடைகிறார்கள். இப்போது தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டிய நேரம் இது” என்றார். முன்னாள் கேப்டன் மொயின் கான், “உயர்மட்ட அணிகளை வெல்ல முடியாவிட்டால் ஐசிசி கோப்பை வெல்ல முடியாது. முக்கிய வீரர்கள் உலகக்கோப்பையில் ஜொலிக்கவில்லை” என சாடினார்.

இந்த தொடரில் பாபர் ஆசம், தற்போதைய கேப்டன் சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், ஷஹீன் அப்ரிடி, முகமது நவாஸ் உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நாடு திரும்பிய பின் கேப்டன் சல்மான் அலி ஆகா பதவி விலகலாம் என்றும், பாபர் ஆசம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் அணியின் எதிர்காலம் குறித்து அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கவலையுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

T20 World Cup defeat PCB gives death blow to Pakistan players who lost to India Salary cut Rs50 lakh fine


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->