பிப்ரவரி பாக்ஸ் ஆபிஸ்: ‘வித் லவ் முதல் தாய் கிழவி வரை...அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் மூவீஸ் இதோ!
February Box Office From With Love to Thai Kizhavi Here are the top 5 highest grossing Tamil movies
2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஜனவரி மாதம் எதிர்பார்ப்புக்கு இணையாக அமையாத நிலையில், பிப்ரவரியில் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய படங்கள் இல்லாததும், ரீ-ரிலீஸ் படங்களின் ஆதிக்கமும் காரணமாக பிப்ரவரி மாதமும் சின்ன பட்ஜெட் படங்களுக்கே மேடையாக அமைந்தது. இதனால் பல புதிய படங்கள் போதிய திரையரங்குகள் இல்லாமல் தத்தளித்தன. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
5. பூக்கி – ரூ.1.37 கோடி
விஜய் ஆண்டனி தயாரிப்பில் காதலர் தின வெளியீடாக வந்த ‘பூக்கி’ படம் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டாலும், திரையரங்குகள் குறைவாக கிடைத்ததால் வசூலில் பின்னடைந்தது. உலகளவில் ரூ.1.37 கோடி வசூலித்து பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.
4. சீதா பயணம் – ரூ.1.73 கோடி
ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கிய ‘சீதா பயணம்’ படத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்திருந்தார். பல மொழிகளில் வெளியான இப்படம் லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாக வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. உலகளவில் ரூ.1.73 கோடி வசூலித்து நான்காம் இடத்தில் உள்ளது.
3. மை லார்ட் – ரூ.2.91 கோடி
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘மை லார்ட்’ படம் விமர்சகர்களிடமிருந்து பாராட்டு பெற்றாலும், திரையரங்குகளில் பெரும் ஆதரவு பெறவில்லை. இப்படம் ரூ.2.91 கோடி வசூலித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
2. தாய் கிழவி – ரூ.18.6 கோடி
பிப்ரவரி 27-ம் தேதி வெளியான ‘தாய் கிழவி’ படம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஓரளவு நிம்மதி அளித்தது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் மூன்று நாட்களிலேயே ரூ.18.6 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
1. வித் லவ் – ரூ.38.19 கோடி
செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் பிப்ரவரி 6-ம் தேதி வெளியான ‘வித் லவ்’ படம் பாக்ஸ் ஆபிஸில் முன்னிலை வகித்தது. அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்த இப்படம் உலகளவில் ரூ.38.19 கோடி வசூலித்து பிப்ரவரி மாதத்தின் அதிக வசூல் படமாக மாறியுள்ளது.
மொத்தத்தில், பெரிய படங்கள் இல்லாத நிலையில் சின்ன பட்ஜெட் படங்களே பிப்ரவரி பாக்ஸ் ஆபிஸை தாங்கியுள்ளன. மார்ச் மாதத்தில் பெரிய வெளியீடுகள் வருவதால் வசூல் நிலைமை மாறுமா என்பது திரையுலகில் எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
February Box Office From With Love to Thai Kizhavi Here are the top 5 highest grossing Tamil movies