பிரிகிடாவின் உணர்ச்சி பொங்கிய உரை...! தனுஷ் அதிர்ச்சி அடைந்தாரா...?
brigida emotional speech Was Dhanush shocked
தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் தனக்கென தனி இடத்தை பதித்து வரும் தனுஷ், தனது 4வது இயக்குநர் படமாக “இட்லி கடை” யை உருவாக்கியுள்ளார்.
இது தனுஷ் நடிக்கும் 52வது படமாகும். இப்படம் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி வெள்ளிவிழாவாக திரைக்கு வர இருக்குறது.இந்நிலையில், சென்னையின் நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது.

அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை பிரிகிடா சாகா, தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியபோது,“ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு ரோல் மாடல் இருப்பாங்க. எனக்கு அது தனுஷ் சார். நான் அவரின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் நடிப்பது எனக்கு வாழ்நாள் சாதனை நினைவாகும்.
என் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யலாம் என சிந்தித்துக் கொண்டிருந்த தருணத்தில், இந்த ‘இட்லி கடை’ வாய்ப்பு என்னை வந்தடைந்தது. இன்று இந்த மேடையில் நிற்பதற்கு காரணமான அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தில், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், நித்யா மேனன் மற்றும் பிரிகிடா சாகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
English Summary
brigida emotional speech Was Dhanush shocked