‘வித் லவ்’ புரமோஷனில் சர்ச்சை: ரஜினிகாந்த் மகளை திடீரென திட்டும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..எதுக்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மீது திடீரென சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு ஆதரவாகவே இருக்கும் ரசிகர்கள், இந்த முறை சவுந்தர்யாவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் தம்பதிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சவுந்தர்யா என இரண்டு மகள்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சவுந்தர்யா, ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கோச்சடையான் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேபோல் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், தயாரிப்பாளராக சவுந்தர்யா உருவாக்கியுள்ள வித் லவ் திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, பத்திரிகையாளர்கள் மற்றும் செலிபிரிட்டிகளுக்கான சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு, நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சவுந்தர்யா தனது தந்தை ரஜினிகாந்தையும் சென்னை சத்யம் தியேட்டர்-க்கு அழைத்து படம் பார்க்க வைத்தார்.

ஆனால் இந்நிலையிலேயே, சில ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சவுந்தர்யாவை விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கான முக்கிய காரணமாக, இயக்குநர் ரத்னகுமார் ‘வித் லவ்’ படத்தை பாராட்டி கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவித்து சவுந்தர்யா வெளியிட்ட ட்வீட் தான் என கூறப்படுகிறது.

இதற்கு பின்னணி அரசியல் போல ஒரு ரசிகர் மோதல் இருப்பதாகவும் பேசப்படுகிறது. ஜெயிலர் பட விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா கதையை விஜய் ரசிகர்கள் விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடியாக லியோ வெற்றி விழாவில் ரத்னகுமார் பேசிய “கழுகுக்கு பசிச்சா கீழ இறங்கித்தான் ஆகணும்” என்ற பேச்சு, ரஜினிகாந்த் ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதன் காரணமாகவே, ரத்னகுமார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் பணியாற்றவில்லை என்ற பேச்சுகளும் அப்போது பரவின.

இந்த சூழலில், அதே ரத்னகுமாருக்கு “Thank you so much” என சவுந்தர்யா ட்வீட் செய்தது தான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும், படையப்பா ரீ-ரிலீஸுக்காக ரஜினிகாந்தை வீடியோ வெளியிட சொல்லி ‘டார்ச்சர்’ செய்தார் என்றும், தற்போது ‘வித் லவ்’ புரமோஷனுக்காக தியேட்டருக்கு அழைத்து வருகிறார் என்றும் சில ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இருப்பினும், ஒரு இயக்குநர் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்ததற்காக சவுந்தர்யா ரஜினிகாந்தை தாக்குவது நியாயமல்ல என பல ரசிகர்களே சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில், ‘வித் லவ்’ திரைப்படத்தின் புரமோஷன், எதிர்பாராத விதமாக ரசிகர் அரசியல் சர்ச்சையாக மாறியிருப்பது தான் தற்போது கோலிவுட்டில் அதிகம் பேசப்படும் விஷயமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversy over With Love promotion Superstar fans suddenly scold Rajinikanth daughter Who knows


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->