காமராஜர் பிறந்த நாள் விழா..நலத்திட்ட உதவிகள் வழங்கிய விக்ரமராஜா மற்றும் MLA பிரபாகர் ராஜா! - Seithipunal
Seithipunal


சென்னை எம் ஜி ஆர் நகர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.இதில்  தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா மற்றும் விருகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை  வழங்கினர்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 12 3 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

 தமிழகத்தில் பள்ளிகள் தோறும் கல்வி நாளாக அறிவிக்கப்பட்டு பள்ளிகளில் மாணவர்கள் காமராஜரை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கர்மவீரர் காமராஜரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் போன்றவர்களை வழங்கினர், இதேபோல பல்வேறு கட்சியினரும் பல்வேறு அரசியல் அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு  மலர் தூவி மரியாதை செய்தனர். அது மட்டும் இல்லாமல் பல்வேறு நல்ல திட்ட உதவிகளை வழங்கினார்கள்,

 அதன் ஒரு பகுதியாக சென்னை எம் ஜி ஆர் நகர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. காமராஜர் நற்பணி மன்றத்தின் அமைப்பாளர் ராமஜெயம் தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா மற்றும் விருகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை  வழங்கினர்.மேலும அன்னதானமும் வழங்கப்பட்டன. 135 வது மாமன்ட்ட உறுப்பினர் கண்ணன்,தமிழ்நாடு வணிகர் பேரவையின் மாநில பொருளாளர் சதாதுல்லா,  மாவட்டத் தலைவர் பன்னீர் ,செயலாளர் பாபு மற்றும் காமராஜ்  மற்றும் காமராஜர் மன்ற நிர்வாகிகள் எம் ஜி ஆர் நகர் மார்க்கெட் பகுதி வியாபாரிகள்  உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamarajars birthday celebration Vikramaraja and MLA Prabhakar Raja provided welfare scheme assistance


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->