உங்களுடன் ஸ்டாலின் சிறப்புமுகாம்..தேனியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் துவக்கிவைத்தார்! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புமுகாமை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங்.மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்-நகராட்சி ஆணையாளர் .நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர்குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர். 

 

 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.அரசு துறை சேவை, திட்டங்களை, வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில்'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 196 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. 

தொடர்ந்து, நவம்பர் 30-ந் தேதி வரை இந்த முகாம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புமுகாம் இன்றுநடைபெற்றது.இந்த முகாமை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங்.மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்-நகராட்சி ஆணையாளர் .நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர்குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில்நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை-காவல்துறை-மருத்துவதுறை. உள்ளிட்ட 46 துறைசார்ந்த அலுவலர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டனர்.

இந்த மக்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை துவாக்கி வைக்க வருகை தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை. பெரியகுளம் திமுக நகர செயலாளர் கே.முகமது இலியாஸ் மற்றும் துணைச்செயலாளர் மு.சேதுராமன்.ஏ.பி சரவணன். பொருளாளர் சுந்தரபாண்டி ஆகியோர் வரவேற்றனர்
 
இந்த நிகழ்வில் திமுகமாவட்ட பிரதிநிதி ராஜபாண்டியன் செந்தில்குமார்-வார்டு கவுன்சிலர் ரூபினி ஜான்-முன்னாள் இளைஞரணிநாகலிங்கம்வார்டுசெயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்
இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனுக்களை வழங்கினார்கள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalins special camp with you District Collector Ranjeet Singh inaugurated it in Dheniy


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->