தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்.. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
Government welfare scheme assistance for eligible beneficiaries Collectors instructions at the public grievance redressal meeting
திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 384 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 86 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 45 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 48 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 55 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 150 மனுக்களும் என மொத்தம் 384 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு,சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர்(சபாதி) பாலமுருகன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீராம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம் எடுப்பு) நிர்மலா ,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் உஷா ராணி , மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Government welfare scheme assistance for eligible beneficiaries Collectors instructions at the public grievance redressal meeting