நடிகர் ரோபோ சங்கர் மறைவு - இன்று மதியம் இறுதிச்சடங்கு.!!
today afternoon actor robo sankar funeral
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், ‘தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் தடம் பதித்தார். அதன் பின்னர் ‘மாரி', ‘விஸ்வாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த ரோபோ சங்கர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
கட்டுக்கோப்பான உடல் கொண்ட ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு ரோபோ சங்கர் சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததையடுத்து உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் மறைவு செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும், ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து நடிகர் ரோபோ சங்கரின் உடல் சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும், பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
today afternoon actor robo sankar funeral